தினமலர் 20.08.2010
மகாலைச் சுற்றி அழகுபடுத்த ரூ.1.35 கோடியில் திட்டம்மதுரை
:மதுரை திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றி, 1.35 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.மகாலின் முன்புறத்தில், 11.50 லட்சம் ரூபாய் செலவில் திருமலை நாயக்கர் சிலையைச் சுற்றிலும் புல்வெளி அமைத்து, நடைபாதையை அழகுபடுத்துதல், மகாலின் முன்புற திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் 12.90 லட்சம் ரூபாய் செலவில் “பேவர் பிளாக்‘ அமைத்தல், மகால் பகுதியில் உள்ள துளசிராம் பூங்காவில் 20.50 லட்சம் ரூபாய் செலவில் நீரூற்று, கிரானைட் பெஞ்ச், பெயர் பலகை, மின் விளக்கு வசதிகள் செய்தல், திருமலை நாயக்கர் அரண்மனையைச் சுற்றிலும் 84.40 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை, மின் விளக்கு அமைத்தல் உள்பட மொத்தம் 1.35 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப் படுவதற்கான தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.