தினமலர் 20.08.2010
கோவை அரசு மருத்துவமனையில் 2 லட்சம் சதுர அடியில் புதிய கட்டடம் : கலெக்டர் தகவல்கோவை
: “கோவை அரசு மருத்துவமனையில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்படும்‘ என, கலெக்டர் உமாநாத் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திட்டக்குழுக் கூட்டம், நேற்று நடந்தது. கோவை அரசு மருத்துவமனையை முழுமையாக மேம்படுத்துவது குறித்து, மாநகராட்சி கவுன்சிலரும், குழு உறுப்பினருமான செந்தில்குமார் கோரிக்கை வைத்திருந்தார்.இது தொடர்பாக பதிலளித்து
, கலெக்டர் உமாநாத் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் எந்தெந்த துறைகளை இட மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்; எதற்கு அதிகமான பணியாளர்கள் தேவைப்படுவர் என்று விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு 50 கோடி ரூபாய் சிறப்பு நிதியையும் ஒதுக்கியுள்ளது. அங்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விரைவில் நேரடி ஆய்வு செய்வர்.கோவை மருத்துவமனையைப் பொறுத்தவரை
, பிரசவ வார்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக ஆறு கோடி ரூபாய் மதிப்பில் தனியாக கட்டடம் கட்டப்பட உள்ளது. அரசின் இலவச காப்பீட்டுத் திட்டம், சத்துணவுத் திட்டம் போல, நிச்சயமாக தொடர்ந்து செயல்படும். அதனால், அந்த திட்டத்தில் சிகிச்சை பெறக்கூடிய நோய்களுக்கு அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.கோவை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான தேவை அதிகம் உள்ளது
. அதே போல, மருந்தியல் துறையையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. இதனால், அரசு ஒதுக்கிய நிதியில் பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து புதிய கட்டடம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. டீன், இருப்பிட மருத்துவ அலுவலர் உள்ளிட்டோருக்கான அலுவலகங்கள், தீவிர சிகிச்சைப்பிரிவு, இருதய சிகிச்சைப் பிரிவு, தற்கொலை மற்றும் பாம்புக்கடிக்கான அவசர சிகிச்சைப் பிரிவு, டயலாசிஸ், மருந்து வழங்குவதற்கான பொது வார்டு, எலும்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காயம், உறுப்புகளை இணைக்கும் மைக்ரோ சர்ஜரி சிகிச்சைகளை உள்ளடக்கிய பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.அதேபோல
, பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் 200 பேர் தங்கக்கூடிய விடுதி ஆகியவற்றை உள்ளடக்கிய பிரமாண்ட கட்டடம் கட்டப்படும். மொத்தம் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பில், தரை தளம் மற்றும் மூன்று தளங்களைக் கொண்டதாக இந்த கட்டடம் அமைக்கப்படும்; எதிர்காலத்தில் மேலும் இரண்டு தளங்களை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் உமாநாத் கூறினார்.இருதய ரத்த நாளம் அடைப்பு போன்ற குறைபாடுகளை
“ஆஞ்சியோகிராம்‘ செய்யாமலே, வலியின்றி பார்க்க உதவும் “128 ஸ்லைஸ் சி.டி.,ஸ்கேன்‘ வசதிகளை ஏற்படுத்தினால், பலரும் பயனடைவர் என்று உறுப்பினர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.இதற்கு கலெக்டர் பதிலளிக்கையில்
, “”இதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பது டாக்டர் என்ற முறையில் எனக்குத் தெரியும். அரசு மருத்துவமனையில் இத்தகைய வசதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை. இருப்பினும் கூடுதல் ஸ்கேன் வசதிகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம்,” என்றார்.ரயில் நிரந்தரமாக்கப்படும்
: கோவை – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் நிரந்தரமாக்கப்படுமா என்று பல்வேறு உறுப்பினர்களும் கேள்வி எழுப்பினர். அதற்கு கலெக்டர் பதிலளிக்கையில், “”இந்த ரயிலை ஒவ்வொரு மாதமாக நீட்டித்து வருகின்றனர்; நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும் என பல வழிகளிலும் வலியுறுத்தி வருகிறோம். மத்திய அமைச்சர் ராஜாவும் இதற்காகப் பேசியுள்ளார்.பயணிகளும் அதிகமாக இருப்பதால்
, வருவாயும் ரயில்வே துறைக்கு அதிகம் கிடைக்கிறது. இதனால், ரயிலை நிரந்தரமாக நீட்டிக்க ரயில்வே போர்டு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும்,” என்றார்.