னகரன் 20.08.2010
செப்டம்பர் 26ம் தேதி 27 வார்டுக்கு இடைத்தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பெங்களூர், ஆக.20: மாநிலத்தின் பல்வேறு நகரிய உள்ளாட்சி அமைப்புகளில் 27 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் வருகிற செப்.26ம் தேதி நடக்கவிருக்கிறது. மாநிலத்தின் 13 நகரிய அமைப்புகளில் காலியாக இருக்கும் 27 வார்டு கவுன்சிலர்களுக்கான இடைத்தேர்தல் வருகிற செப்.26ம் தேதி நடக்கவிருக்கிறது. இத ற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இத்தேர்தலுக்கான அறிவிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் செப்.6ம் தேதி வெளியிடுவார்கள். வேட்புமனுதாக்கல் செய்த செப்.13ம் தேதி கடைசிநாளாகும். செப்.16ம் தேதி வேட்புமனுவாபஸ் பெற கடைசிதேதியாகும். செப். 26ம் தேதியன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும். செப்.28ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடக்கும் வார்டுகள் வருமாறு:
பெல்லாரி மாநகரா ட்சி(2 வார்டுகள்), சிரகுப்பா டவுன்முனிசிபல் கவுன்சில்(2வார்டுகள்), சங்கேஸ்வர், அதானி, ராமதுர்கா டவுன்முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் குடச்சி டவுன்பஞ்சாயத்து(தலா ஒரு வார்டு), லட்சுமேஸ்வர் டவுன்முனிசிபல் கவுன்சில்(2 வார்டுகள்), முண்டரகி டவுன்முனிசிபல்கவுன்சில்(2 வார்டுகள்), பாகல் கோட்டை மாவட்டத்தில் கஜேந்திரகாட், மகாலிங்கபுரா, தெரலடா டவுன்முனிசிபல்கவுன்சில்(தலா ஒரு வார்டு), கொப்பல் சிட்டிமுனிசிபல் கவுன்சில்(2 வார்டுகள்), ரானேபென்னூர், கார்வார், முல்பாகல், மாலூர் டவுன்முனிசிபல் கவுன்சில்(தலா ஒருவார்டு), சித்ரதுர்கா மாவட்டத்தில் மொலகல்மூரு டவுன்பஞ்சாயத்து(ஒரு வார்டு), தும்குர் சிட்டிமுனிசிபல்கவுன்சில் மற்றும் மதுகிரி டவுன்முனிசிபல்கவுன்சில்(தலா ஒருவார்டு), நாவல்குண்டு, ராய்ச்சூர், பீதர் சிட்டிமுனிசிபல்கவுன்சில்(தலா ஒருவார்டு). தேர்தல் நடத்தைவிதிகள் ஆக.12 முதல் செப்.29ம் தேதி வரை அமலில் இருக்கும்.