தினகரன் 20.08.2010
ராமநாதபுரத்தில் சாலைகளை சீரமைக்க ரூ11.25 கோடி நிதி ஒதுக்கீடு நகர்மன்ற தலைவர் லலிதகலா தகவல்
ராமநாதபுரம் ஆக. 20: ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் லலிதகலாரத்தினம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராஜா உசேன், ஆணையாளர் முஜிபுர்ரகுமான், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நகர்மன்றத்தில் நடந்த விவாதம் வருமாறு:
பார்த்தசாரதி:
பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் இணைப்பு கேட்டு பணம் செலுத்திய மக்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும்.
நாகஜோதி:
பணம் செலுத்தியவர்கள் குடிநீர் இணைப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.
ஆணையாளர்:
பணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு கொடுப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு இன்னும் பலர் பணம் செலுத்தாமல் உள்ளனர். இதனை பெற்றுத்தர உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நிஜாம்அலிகான்:
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் சுத்தமில்லாமல் குடிக்க முடியாத அளவில் உள்ளது. இதனால், தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலையில் மக்கள் உள்ள னர்.
ஆணையாளர்:
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் சுகாதார முறையில் வழங்கப்படுகிறது. சிலர் தங்களது விருப்பத்தின்பேரில் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்
வீரபாண்டியன்:
தெருவிளக்களை பராமரிப்பு செய் வதில் தொய்வு ஏற்பட்டுள் ளது. பல இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு நடக்கிறது.
ஆணையாளர்:
மின் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. விரைவில் நியமனம் செய்தபிறகு பிரச்னை தீரும். மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது சட்டவிரோதம். பிடித்தால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
பார்த்தசாரதி:
சிலர் தங்களது சொந்த பெயர்களை தெருக்களுக்கு வைக்கிறார்கள். இதுபோன்று வைக்கலாமா?
ஆணையாளர்:
அவர்களது விருப்பப்படி வைக்கும் பெயர்களை தடுக்க முடி யாது. ஆனால், அந்தப்பெயர்கள் நகராட்சி பதிவில் இருக்காது.
தலைவர்:
பாதாள சாக் கடை திட்டப்பணிகள் விரை வாக முடிக்கப்பட உள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும் சாலைகள் அமைக்க ரூ11 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 கிமீ து£ரம் அனைத்து சாலைகளும் போடப்படும். இதற்கான அடுத்த மாதம் இறுதிக்குள் டெண்டர் விடப்பட உள்ளது. அதற் கான பணிகள் நடந்து வருகிறது.