தினமலர் 26.08.2010
ரூ.20 லட்சம் மதிப்பில் பள்ளிக்கரணையில் புதிய கட்டடம்
பள்ளிக்கரணை : பள்ளிக்கரணை பேரூராட்சிக்கு 20 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. ஆறு மாதத்தில் கட்டுமானப் பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் – வேளச்சேரி மெயின்ரோட்டில் பள்ளிக்கரணை பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த கட்டடம் வசதியின்றி பழுதடைந்து காணப்பட்டது. எனவே, பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் கட்ட மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் தற்காலிகமாக சமுதாய நலக்கூடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய கட்டடம் 2,500 சதுர அடியில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது. கீழ் தளத்தில் அலுவலகமும், முதல் தளத்தில் மன்ற கூட்ட அறையும் கட்டப்படுகிறது.
அதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. இன்று டெண்டர் பிரிக்கப்படுகிறது. டெண்டர் விட்ட ஆறு மாத காலத்திற்குள் பேரூராட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பேரூராட்சி தலைவர் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.