தினமலர் 26.08.2010
அமெரிக்க தூதரகம் அருகில் நிழற்கூரை அமைக்க ஏற்பாடு
சென்னை : “”அமெரிக்க தூதரகம் அருகில், விசா வாங்க காத்திருப்போர்களுக்காக நிழற்கூரை அமைக்கப்படும்,” என மேயர் சுப்ரமணியன் கூறினார்.
மேயர் சுப்ரமணியன் கமிஷனர் ராஜேஷ்லக்கானி ஆகியோர் நேற்று அண்ணா சாலையில் உள்ள, அமெரிக்க தூதரக அலுவலகத்திற்கு சென்று தூதரக அதிகாரிகளை சந்தித்தனர். பின், மேயர் கூறுகையில், “அமெரிக்கா செல்வதற்காக விசா வாங்க அமெரிக்க தூதரகத்தின் முன் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு நிழல் கூரைகளுடன் கூடிய இருக்கைகள் அமைக்க அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. தூதரகம் அருகில் நடைபாதையை அகலப்படுத்தி பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்படும்‘ என்றார்.