தினகரன் 26.08.2010
முன்னாள் பேரூராட்சி தலைவர்களுக்கு பென்சன் கூட்டத்தில் தீர்மானம்
தக்கலை, ஆக.26: குமரி மாவட்ட முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் தக்கலையில் பி.டி.எஸ்.மணி தலைமையில் நடந்தது. இதில் தலைவ ராக பி.டி.எஸ்.மணி, துணை தலைவராக சந்திரசேனன், தரசம்மாள், செயலாளர்களாக செல்வகுமார், கிதியோன்ராஜ், பொருளாளராக மீரான் மைதீன், செயற்குழு உறுப்பினர்களாக பிராங்கிளின், ஷாகுல் அமீது, வில்லியம்ராஜ், ராம கிருஷ்ணன், புஷ்பம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் முன்னாள் பேரூராட்சி தலைவர்களில் பலர் வறுமையில் வாடுகின்றனர். எனவே அவர்களுக்குபென்சன் வழங்க வேண்டும். இலவச பஸ்பாஸ், மருத்துவ அலவன்ஸ், வீடில்லாத தலைவர்களுக்கு இலவச வீட்டு மனையும் வீடும் வழங்க வேண்டும். எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறுவதற்குரிய மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
குமரி மாவட்ட முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் தக்கலையில் நடந்தது.