தினகரன் 27.08.2010
வீடுகள் ஆக்கிரமிப்பு தொடர்கிறது குப்பை கிடங்காக மாறும் நயினார்குளம் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய 15 மின்மோட்டார்கள் பறிமுதல்
நெல்லை, ஆக.27: நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய 15 மின்மோட்டார்களை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பில் சட்டவிரோத மாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது சம்பந்தமாக கமிஷனர் சுப்பையனுக்கு ஏராளமாக புகார்கள் வந்தன.
இதையடுத்து மாநகர பொறியாளர் ஜெய்சேவியர் தலைமையில் நெல்லை மண்டல உதவி கமிஷனர் சாந்தி, பாளை மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், தச்சை மண்டல உதவி கமிஷனர் சுல்தானா, மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் கருப்ப சாமி ஆகியோர் தலைமை யில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட் டன. குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்பு மற்றும் சட்டவிரோத மின்மோட்டார் இணைப்புகள் குறித்து இந்த குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 15 மின்மோட்டார்கள் பறி முதல் செய்யப்பட்டன.
5 மின்மோட்டார் பொருத்திய இணைப்பு களை துண்டிக்க அதிகாரி கள் நடவடிக்கை எடுத்தனர். ‘அனுமதியின்றி குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்துபவர்கள், சட்டத்திற்கு புறம் பாக குடிநீர் இணைப்பில் மின்மோட் டார் பொருத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரி கள் எச்சரித்துள்ளனர். மேலும் இத்தகைய நபர்களுக்கு திரும்பவும் இணைப்பு கொடுக்க கோரி வரும் மனுக்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளனர்.
பாசன மடைகளை சீரமைக்க வலியுறுத்தல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக குடிநீர் எடுத்த மின் மோட்டார்களை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.