தினமலர் 27.08.2010
அணுமின் நிலையம் செல்ல மாநகராட்சி மாணவிகள் தேர்வு
மதுரை:ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள அணுமின்நிலையத்தின் அறிவியல் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கமிஷனர் செபாஸ்டின் கூறுகையில்,”” மாநகராட்சியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஐந்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.ஜி. வித்யா, ஆர். செல்வலட்சுமி, ஆர். மோனிகா, எச். ஹீமாயா, டி. லட்சுமிப்ரியா ஆகியோர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள அணுமின்நிலையத்திற்கு செல்கின்றனர்,” என்றார்.