மாலை மலர் 27.08.2010
மேல்சபை தேர்தல்
: சென்னை மாநகராட்சியில் இருந்து 2 பேர் எம்.எல்.சி. ஆக வாய்ப்பு; ஆசிரியர்கள், பட்டதாரிகளுக்கான 7 தொகுதிகள் பெயர் அறிவிப்புசென்னை
, ஆக. 27- தமிழ்நாட்டில் சட்ட மேல்சபை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆந்திரா மாநிலத்தை பின்பற்றி, அங்குள்ளது போன்று இந்த மேல்சபை அமைக்கப்படும்.தமிழக மேல்சபையில் மொத்த உறுப்பினர்கள்
(எம்.எல்.சி.) எண்ணிக்கை 78 ஆக இருக்கும். இதில் 26 பேர் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து தேர்ந்து எடுக்கப்படுவார்கள். சட்டசபையில் இருந்து 26 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.ஆசிரியர்கள் பிரதிநிதிகளாக
7 பேரும் பட்டதாரிகள் பிரிவில் இருந்து 7 பேரும் எம்.எல்.சி. ஆக்கப்படுவார்கள். கவர்னர் 12 பேரை நியமனம் செய்வார்.உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து எம்
.எல்.சி. ஆக தேர்வு செய்யப்பட உள்ள 26 பேரும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் தேர்வு ஆவார்கள். அந்த வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 2 நியமன பேரை உறுப்பினர்களாக வாய்ப்பு உள்ளது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதே போல பிரதிநிதித்துவம் கிடைக்கும்.எம்
.எல்.சி.க்களை தேர்வு செய்வதற்கான தொகுதி சீரமைப்பு செய்து முடிக்கப்பட்டு விட்டது. 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் நாளை நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில் மேல்சபை தொகுதிக்கான சீரமைப்பு பட்டியல் வெளியிடப்படும்.தமிழ்நாட்டில் மொத்தம்
32 மாவட்டங்கள் உள்ளன. எம்.எல்.சி. தேர்வுக்காக இதை 25 ஆக தேர்தல் கமிஷன் மாற்றிக்கொண்டிருக்கிறது. 7 சிறிய மாவட்டங்களை பக்கத்தில் உள்ள மாவட்டங்களுடன் சேர்த்து தேர்தல் பணி செய்யப்பட்டுள்ளது.அதன்படி பெரம்பலூர் மாவட்டம் கடலூருடன் சேர்க்கப்பட்டுள்ளது
. கரூர் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்துடனும் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்துடனும், தேனி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்துடனும் சேர்க்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருச்சியுடனும், திருவாரூர் மாவட்டம் நாகப்பட்டினத்துடனும், ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கையுடனும் சேர்க்கப்பட்டுள்ளன.ஆசிரியர்கள்
, பட்டதாரிகளுக்கான 7 தொகுதிகள் பெயர் விபரம் தெரிய வந்துள்ளது. சென்னை, தமிழ்நாடு வடக்கு, தமிழ்நாடு வடக்கு மத்தி, தமிழ்நாடு மேற்கு, தமிழ்நாடு கிழக்கு மத்தி, தமிழ்நாடு தெற்கு மத்தி, தமிழ்நாடு தெற்கு ஆகிய பெயர்களில் 7 தொகுதிகளும் அழைக்கப்படும்.சென்னை தொகுதியில் சென்னை
, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டம் இடம் பெற்றிருக்கும். தமிழ்நாடு வடக்கு தொகுதியில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு வடக்கு மத்தி தொகுதியில் விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர் மாவட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு மேற்கு தொகுதியில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 5 மாவட்டங்கள் உள்ளன.தமிழ்நாடு கிழக்கு மத்தி தொகுதியில் திருச்சி
, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு தெற்கு மத்தி தொகுதியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு தெற்கு மாவட்டத்தில் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த தொகுதி வரையறை குறித்து நாளை அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் விவாதித்து கருத்துக்கள் கேட்கும்
. தேவைப்பட்டால் தொகுதிகள் மீண்டும் மறுவரையறை செய்யப்படும். நாளை தொகுதிகள் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.இதையடுத்து வாக்காளர்கள் தொடர்பாகவும் நாளை ஆலோசிக்கப்பட உள்ளது
. நவம்பர் முதல் வாரம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் செய்வதற்கு 6 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும்.வாக்காளர்கள் தேர்வில் பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன
. ஆசிரியர் பிரிவில் நடைபெறும் தேர்வில் ஒருவர் பங்கேற்க வேண்டுமானால், அவர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். அதுபோல பட்டதாரி தொகுதிகளில் வாக்களிக்க விரும்புபவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.