தினகரன் 31.08.2010
நாய்களுக்கு இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை நகர்மன்ற தலைவர் தகவல்
பண்ருட்டி, ஆக. 31: பண்ருட்டி நகர மன்றத் தலைவர் பச்சையப்பன் விடுத்துள்ள அறிக்கை: பண்ருட்டி நக ராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை செய்திட அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்பணிக்காக 3 அறை கள் கொண்ட அறுவை சிகிச்சை கூடம் ரூ.1 லட்சம் செலவில் 3 அறைகள் தயார் செய்யப்பட்டு பணிகள் முற்றுபெறும் நிலையில் உள்ளது. 2010&2011ம் ஆண்டில் நாய்கள் 600 எண்ணிக்கையிலும், 2011&2012ம் ஆண்டிலும் 1200 எண்ணிக்கையிலும் இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை செய்திட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இப்பணிகளுக்கு பண்ருட்டி நகரின் ஜெயின் சங்கத்தினர் தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு இப்பணியில் ஒத்துழைப்பு தர உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.