தினமணி 31.08.2010
உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி
திருப்பத்தூர்
,ஆக.30: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கான பிற்படுத்தப்பட்ட மானிய நிதித் திட்ட அடிப்படை ஆதாரப் பயிற்சி முகாம் நடைபெற்றது.தில்லி பஞ்சாயத்துராஜ் அமைச்சகம்
, மாநில திட்ட செயலாக்க ஊராக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இப்பயிற்சி முகாமினை மேற்கொண்டது. இம்முகாமில் 8 பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் கவுன்சிலர்கள், மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இப்பயிற்சி முகாமில் மாவட்ட உதவிசெயற்பொறியாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகிக்க
, நகரியல் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் ஆறுமுகம், பயிற்றுநர்களாகக் கலந்து கொண்டு மன்ற உறுப்பினர்களின் கடமை, திட்டப்பணிகள், ஆண்டு திட்டங்களுக்கான முன்னேற்பாடு, நகர்ப்புறத் திட்டமிடுதல், பொருளாதார சமூகவளர்ச்சியில் அரசு அலுவலர்கள், திடக்கழிவு விழிப்புணர்வு, குறித்து பயிற்சியை அளித்தார். இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை திருப்பத்தூர் பேரூராட்சிமன்ற செயல் அலுவலர் எஸ்
.அமானுல்லா செய்திருந்தார். துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் நன்றி கூறினார்.