மாலை மலர் 31.08.2010
சென்னையில் காலி இடங்களில் உள்ள ரூ.1500 கோடி சொத்துக்கள் ஒரு மாதத்தில் பறிமுதல்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக. 31- சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணை மேயர் சத்தியபாமா, கமிஷனர் ராஜேஷ்லக்கானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதைரவி பேசியதாவது:-
சென்னை நகரில் மாநகராட்சி மூலம் கிடைக்கும் திறந்தவெளி இடங்களில் (காலி இடங்கள் ) பூங்காக்கள் அமைத்து வருவது நல்ல முயற்சியாகும். அதே சமயம் சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை போக்கும் வகையில் மாநகராட்சிக்கு கிடைக்கும் திறந்தவெளி காலி நிலத்தில் பூங்கா அமைப்பதற்கு முன் தரைக்கு அடியில் கார் பார்க்கிங் அமைக்க வேண்டும். மேல் பகுதியில் பூங்கா, விளையாட்டு திடல் அமைக்கலாம். இதனை ஒரு சோதனையாக ஒரு சில இடங்களில் மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி மூலம் இறந்தவர்கள் உடலை பாதுகாக்கும் குளிரூட்டும் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அவை பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள் ளது. பெட்டிகளை பரா மரிக்க டெண்டர் விட வேண் டும். அல்லது மண்டல அள வில் வைத்து பராமரிக்க வேண்டும். சென்னை சாலைகள் மோசமாக உள் ளது. தாருடன் பிளாஸ்டிக் பொருட்களை கலந்து ஜல்லி சேர்த்து சாலை போட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு மேயர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது:-
ரூ.1500 கோடி
சென்னை திறந்தவெளி காலி இடங்கள் 16 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. இன்னும் 98 இடங்கள் இதே போல் இருக்கின்றன. அதை ஆய்வு செய்து வருகி றோம். 650 முதல் 700 கிரவுண்ட் நிலம் திறந்த வெளி இடங்களாக உள்ளன. இதன் மதிப்பு ரூ. 1500 கோடி ஆகும்.
இந்த சொத்துக்கள் பல இடங்களில், பல்வேறு நிலை களில் இருந்து கொண் டிருக்கிறது. யாரிடம் இருந் தாலும் இந்த சொத்துக் களை இன்னும் ஒரு மாதத் தில் மாநகராட்சி பறி முதல் செய்யும். பெரிய திறந்த வெளி இடங்களில் பூமிக்கு அடியில் கார் பார்க்கிங் கட்டி அதன் மேல் பகுதியில் விளையாட்டு திடல், பூங்கா எதிர்காலத்தில் கட்டப்படும்Ó என்றார்.
லயோலா லாசர் (காங்.):- திறந்தவெளி காலி இடங்களில் பூங்கா அமைப் பது மட்டுமின்றி என்ஜினீ யரிங், மருத்துவ கல்லூரி கள், சமுதாய கூடங்களை யும் கட்டலாம். அதில் மாநக ராட்சி பள்ளி மாணவ– மாணவிகளுக்கு முன் னுரிமை வழங்க வேண் டும். 78-வது வார்டில் சூளைமேடு நெடுஞ்சாலை சவுராஷ்டிரா நகர் 6-வது தெருவில் சென்னை பள்ளி அருகில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
செங்கை செல்லப்பன் (காங்.):- கக்கன் நூற் றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடும் இவ் வேளையில் அவருக்கு சென்னையில் ஒரு சிலை கூட இல்லை. இதனால் என்னுடைய வட்டத்தில் அவரது சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.
ஜெயராமன் (பா.ம.க.):- சென்னையில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அவற்றை அள்ளுவதற்கு ஆட்கள் போதுமானதாக இல்லை. கூடுதலாக ஆட் களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
தேவிகா (மார்க்சிஸ்ட் கம்யூ.):- சென்னையில் கொசு தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. கொசுக் களை ஒழிக்க எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை. கொசு மருந்து தரமான தாக இல்லை. கொசு மருந்து எவ்வளவு பயன் படுத்தப்படுகிறது என்பதை விளக்க வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் வாந்தி–பேதி நோய்கள் ஏற்படுகின்றன.
ஜெயகலா பிரபாகர் (காங்.):- மாநகராட்சி கவுன் சிலர்களுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் அரசு வழங்க வேண் டும். திரைப்பட தொழி லாளர்களுக்கு வழங்கியது போல முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், கவுன்சிலர்கள் நலனில் அக்கறை கொண்டு இதை வழங்க வேண்டும். அதில் வீடு கட்ட வங்கி கடனும் வழங்க வேண்டும். கவுன்சிலர் அமர்வு கட்டணம், அல்லது மாத சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். அதில் உள்ள தடையை நீக்கி மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும்.
மகேஷ்குமார் (தி.மு.க.):- சைதாப்பேட்டை தாலுகா அலுவலக சாலையில் லிப்டுடன் கூடிய நடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும்?
மேயர் மா.சுப்பிரமணியன்:- இந்த பணிகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது 15 கவுன்சிலர்கள் கேள்வி கேட்டிருந்தனர். அதில் பெரும்பாலான கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. சிலர் மிகவும் தாமதமாக வந்தனர்.
கேள்வி கேட்டிருந்த சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு மேயர் பேச வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவர்கள் இருக்கையில் இல்லை. இதையடுத்து மேயர் மா. சுப்பிரமணியன், கேள்வி கேட்கும் கவுன்சிலர்கள் கண்டிப்பாக கூட்டத்திற்கு வரவேண்டும். கேள்வி கேட்டு விட்டு வராததால் மன்ற நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே இனி வரும் கூட்டங்களில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்