தினகரன் 02.09.2010
குடியிருப்புகளுக்கு தற்காலிக சான்றிதழ் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ் இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்
.புதுடெல்லி
, செப். 2: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக 1,200 குடியிருப்புகளுக்கு தற்காலிக ஒழுங்குமுறை சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பி உள்ளது.டெல்லியில்
2008ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக 1,200 குடியிருப்புகளுக்கு தற்காலிக ஒழுங்குமுறை சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் அங்கீகாரமற்ற அந்த குடியிருப்புகள், இடிபடும் நிலையில் இருந்து தப்பின. இந்த விவகாரத்தில் முதல்வர் ஷீலா தீட்சித், மக்களை தவறாக வழிநடத்திச் சென்றதாகவும், தன்னுடைய அதிகாரத்தையும் நிலையையும் தவறாக பயன்படுத்தியதாகவும் டெல்லி பா.ஜ. தலைவர் ஹர்ஷ் வர்தன் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நீதிபதி மன்மோகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது
. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:மனுதாரர் ஹர்ஷ் வர்தன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை ஆராய்ந்ததில்
, அதில் முதல்கட்ட ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இநத வழக்கில் முக்கியமான பிரச்னை கிளப்பப்பட்டுள்ளது. அரசாட்சியின் மாட்சிமை, பொதுப் பணியாளரின் நடவடிக்கை, அவர்கள் தங்கள் பணியை செலுத்துதலில் உள்நோக்கம் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.பல குடியிருப்பு பகுதிகளுக்கு தற்காலிக ஒழுங்குமுறை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில்
, இவற்றுக்கு உடனடியாக தற்காலிக சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் குறித்து ஆராயப்பட வேண்டியுள்ளது. . இதனால் இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஷீலா தீட்சித் பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது.