தினமலர் 09.09.2010
கலெக்டர், மேயர் ஜெர்மனி பயணம்
கோவை: கோவை கலெக்டர், மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர், ஒரு வார பயணமாக ஜெர்மனி நாட்டுக்குச் சென்றுள் ளனர். ஜெர்மனி நாட்டின் எஸ்லிங்கன் ஆம்நெக்கர் என்ற நகரின் மேயர் அழைப்பின் பேரில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் கோவை கலெக்டர் உமாநாத், கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன் சுல் மிஸ்ரா ஆகியோர், ஜெர்மனி சென்றனர்.