தினகரன் 17.09.2010
தீயணைப்பு படைக்கு பெண்களை தேர்வு செய்ய மாநகராட்சி திட்டம்
மும்பை, செப்.17: தீயணைப்பு படையில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள் ளது. இதற்கான கொள்கை ஒன்றை இறுதி செய்யும் நடவடிக்கையில் மாநக ராட்சி தீவிரமாக ஈடுபட்டு வரு கிறது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் இது பற்றி கூறு கையில், “புதிய கொள்கைக்கு மாநகராட்சி கமிஷனர் சுவா தீன் ஷத்திரியா ஒப்புதல் அளித்ததும் அடுத்த மூன்று மாதத்தில் தீயணைப்பு படைக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுவர். பெண்களு க்கு 10 முதல் 30 சதவீதம் வரை இடஒதுக்கீடு செய்யப் படும்Ó என்றார்.
இந்த ஆண்டு துவக் கத்தில் பைகுலாவில் உள்ள தீயணைப்பு படை தலைமைய கத்தில் நடந்த ஆண்டு விழாவின் போது, ஷத்தி ரியாவும் மேயர் ஸ்ரத்தா ஜாத வும் இந்த திட்டத்துக்கு ஆத ரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் இந்த திட் டம் பற்றி குறிப் பிடுகையில், “தீயணைப்பு இலாகாவில் உள்ள 120 காலிடங்களை மாநகராட்சி இந்த ஆண்டு இறுதியில் நிரப்பவிருக்கிறது. பெண்களுக்கான இடஒதுக் கீடு அந்த சமயத்தில் அமல் படுத்தப்படும். பெண் தீயணைப்பு ஊழி யர்களின் முதல் குழு அப் போது பதவியேற்கும் என்றார்.
தீயணைப்பு படைக்கு பெண் ஊழி யர்களை சேர்த் துக் கொள்வதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இருப்பதாகவும் இதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூடுதல் மாநகராட்சி கமிஷனர் மணீஷா மாய்ஸ்கர் தெரி வித்தார்.