தினமலர் 29.09.2010
பாளை., 25வது வார்டில் ஓடையைசீரமைக்க மேயரிடம் வலியுறுத்தல்
திருநெல்வேலி:பாளை., யில் 25வது வார்டில் பல மாதங்களாக உடைந்துள்ள ஓடையை சீரமைக்கவேண்டும் என மேயரிடம் காங்கிரஸ் பிரமுகர் சங்கரபாண்டியன் மனுக் கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பாளை., 25வது வார்டு புது உலகம்மன் கோயில் முன்பு ஓடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஓடை உடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் ஆனதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மன் கோயில் தசரா திருவிழா நடைபெற இருப்பதால் கோயில் சப்பரம் ஊருக்குள் வர முடியாத நிலை உள்ளது. எனவே ஓடையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.