தினகரன் 30.09.2010
மாநகராட்சி கட்டணக்கழிப்பறையில் சுகாதாரகேடு: கவுன்சிலர்கள் புகார்
கோவை, செப் 30: கழிவறைகள் நாறி கிடக்கிறது. சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்துவதாக உள் ளது. எவ்வித பராமரிப்பும் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந் தது. இதில் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், பாரதியார் ரோடு, புலியகுளம் மெயின் ரோடு, திருச்சி ரோடு, ரேஸ் கோர்ஸ், அண்ணா மார்க் கெட், எம்.ஜி.ஆர் மார்க்கெட், பூ மார்க்கெட், காந்தி பார்க், தடாகம் ரோடு, ஆம்னி பஸ் ஸ்டாண்ட், கணபதி, சீனிவாசபுரம், சிவானந்தா காலனி, வ.உ.சி பூங்கா, உப்பிலிபாளையம், காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட், லிங்கப்ப செட்டி வீதி, தியாகி குமரன் வீதி, டவுன்ஹால், உக்கடம் பஸ் ஸ்டாண்ட், செட்டி வீதி பகுதியில் மாநகராட்சி கட்டணக்கழிப்பறைகளை மறு வடிவமைப்பு செய்ய விருப்ப கேட்பு அறிக்கை கோரப்பட் டது. காந்திபுரம் பஸ் ஸ்டா ண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கழிப்பறைகளை திரும்ப கட்டவேண்டும். அவி னாசி ரோட்டில் ஷாப்பிங் மால், ஜிபிடி மேற்கு நுழைவா யில், சிங்காநல்லூர் பஸ் ஸ்டா ண்ட் வெளிப்புறம், திருச்சி ரோடு உழவர் சந்தை, சுங்கம் ரவுண்டானா, பவர் ஹவுஸ் பகுதியில் புதிதாக கழிப்பிடம் கட்ட விருப்ப கேட்பு அறிக் கை பெற அனுமதி கோரப்பட்டது.
இது குறித்து கவுன்சிலர் கள் பேசுகையில், ” மாநகரா ட்சி கழிப்பறைகள் நாறி கிடக்கிறது.
சுத்தமாக எங்கேயும் பராமரிக்கப்படவில்லை. சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கும் கழிப்பறைக்குள் செல்ல மக் கள் தயங்குகிறார்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர். இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.