தினகரன் 04.10.2010
கோவை மாநகராட்சியில் 7297 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு
கோவை, அக். 4: கோவை மாநகராட்சியில் 7297 நாய்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்யப்பட்டது. கோவை மாநகர் பகுதி யில் 30 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தெரு நாய் இருப்பதாக உத்தேசமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நாய்க ளின் பெருக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. நகரின் பல பகுதியில் கூட்டமாக சுற்றும் நாய்கள், மக்களை கடித்து விடுகின்றன. பல பகுதியில் நாய்களால் சாலை விபத்தும் ஏற்படுகிறது. இரவில் பொதுமக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மன்ற கூட்டத்தில் பல்வேறு முறை ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்பாக நாய்களை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில், குடு ம்ப கட்டுப்பாட்டு திட்டம் வெற்றிகரமாக அமைந்துள் ளது.
கோவை மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி கூறுகையில், ” கோவை நகரில் கடந்த மா தம் வரை 7297 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது.
ஆண், பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கி றோம். இதன் மூலம் நாய்க ளின் பெருக்கம் கணிசமாக குறைந்து விட்டது. ரேபீஸ் நோய் தாக்கம் உள்ள நாய் களை கண்டறிந்து உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்துகிறோம். மாதந்தோறும் 150க்கும் மேற்பட்ட நாய்களுக்கு சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நாய் சிகிச்சை கூடத்தில் கருத்தடை ஆபரே ஷன் நடக்கிறது. ஒரு நாய்க்கு ஆபரேஷன் செய்ய 445 ரூபாய் செலவிடவேண்டும்.
இதில் பாதி தொகையை மத்திய வன விலங்கு நல வாரியம் மானி யமாக வழங்குகிறது. கோவை மாநகராட்சியில் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நடத்தப்படுகிறது,” என்றார்.