தினகரன் 05.10.2010
அமைச்சர் தகவல் பெருநகர வரைவு சட்டம் போல் விரைவில் ஊரமைப்பு சட்டம்
சென்னை
, அக்.5: “பெருநகர வரைவு திட்டம் உருவாக்கியது போல, சில திருத்தங்களுடன் ஊரமைப்பு சட்டம் விரைவில் வர உள்ளது” என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை சார்பில்
, உலக உறைவிட தினத்தை முன்னிட்டு ‘நல்ல நகரம், நல்ல வாழ்க்கை’ என்ற தலைப்பில் 4 நாள் கருத்தரங்கு நடக்கிறது. இதன் தொடக்க விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. நகரங்களை நன்றாக வடிவமைப்பதில் மக்களை ஈடுபடுத்துதல் என்ற தலைப்பில் முதல் நாள் கருத்தரங்கை துணை வேந்தர் திருவாசகம் தொடங்கி வைத்தார். அப்போது ‘வெளிப்படையான சென்னை’ என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை வகித்தார்
. பிரிட்டிஷ் துணைத் தூதர் மைக்நித்தாவ் ரியானாகிஸ், சுற்றுச்சூழல் வல்லுனர் பெல்லியப்பா வாழ்த்தி பேசினர்.அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசியதாவது
:சென்னையில்
2026ல் 1 கோடியே 25 லட்சம் பேர் வாழ்வார்கள். அதற்கேற்ப 2வது பெருநகர வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் இருந்து நிறைய பேர் நகரங்களுக்கு வேலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளோமா என்று பார்க்க வேண்டும்.சமூக பொறுப்பை உணர்ந்த இந்த அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
. பெருநகர திட்டமிடலில் முதல்வர் திறமையானவர். பெருநகர வரைவுத் திட்டம் உருவாக்கியது போல சில திருத்தங்களுடன் ஊரமைப்பு சட்டம் விரைவில் வர உள்ளது.இவ்வாறு பரிதி இளம்வழுதி பேசினார்
.கருத்தரங்கில் கலந்து கொண்ட துணை வேந்தர் திருவாசகம்
, அமைச்சர் பரிதி இளம்வழுதி, சுற்றுச்சூழல் வல்லுனர் பெல்லியப்பா, திட்ட தலைவர் நித்யா வி.ராமன்.