மாலை மலர் 05.10.2010
ரூ
.48 கோடியில் அமையும் பெரம்பூர் நவீன இறைச்சிக்கூடம் டிசம்பர் மாதம் திறக்கப்படும்; மேயர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை
, அக். 5- பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக்கூடத்தை மேயர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது
:-துணை முதல்
–அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நவீன இறைச்சிக் கூடத்திற்கான பணியினை தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 2009ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே வில்லிவாக்கம்
, சைதாப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் ஆட்டிறைச்சிக் கூடங்கள் கட்டப்பட்டு, ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெறப்பட்டது.சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள இந்த இறைச்சிக்கூடம்
1903ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த பழமையான இறைச்சிக் கூடத்தை மாற்றியமைத்து, நவீன முறையில் ரூபாய் 48 கோடி செலவில் வடிவ மைத்தல், கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் டிபிஓடி முறையில் கட்டப்படுகிறது. 9.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப்பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.மீதமுள்ள
6 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்கா அமைக்கப்படும். 3 இடங்களில் குளிர்சாதன வசதிகள், 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் அமைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் பிராணிகளை இறைச்சிக்காக வெட்டும் பொருட்டு, அதனால் ஏற்படும் கழிவுகளை நவீன முறையில் சுத்திகரித்து, வெளியேற்றப்படும். அங்கு ஒரு மணி நேரத்திற்கு 250 ஆடுகள் வெட்ட திட்ட மிடப்பட்டிருந்தது.தற்பொழுது வியாபாரிகளின் கோரிக்கைக்கு ஏற்று
, இரண்டு மடங்காக்கி ஒரு மணி நேரத்திற்கு 500 ஆடுகளும், 60 மாடுகளும் வெட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாடுகள் வெட்டுவதற்கு தனியாக வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும் இங்குள்ள இறைச்சி உறுப்புக்களை விற்பதற்காக அங்குள்ள சுமார் 20, 30 சிறிய வியாபாரிகளுக்கு சிறிய வணிக வளாகக்கூடம் கட்டித்தரப்படும். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தற்பொழுது வேலை செய்யும் தொழிலாளர்களே இதிலும் பணிபுரிவார்கள்.இந்த புதிய கட்டடத்தில் ஆய்வகம்
, பொதுக்கூடம், மழைநீர் வடிகால்வாய், பயோ பில்டர், குளிர்சாதன வசதிகள், பதப்படுத்தும் அறைகள், ஆடுகளை நவீன முறையில் வெட்டுவதற்கான அறைகள், சாலை வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படும். இந்த பெரம்பூர் இறைச்சிக் கூடம் அழகிய பூங்கா வசதிகளுடன் வரும் டிசம்பர் திங்கள் இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது வி
.எஸ். பாபு, எம்.எல்.ஏ., மண்டல குழுத்தலைவர் மா. கன்னியப்பன், தலைமைப் பொறியாளர் கே. விஜயகுமார், மேற் பார்வை பொறியாளர் குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.