தினகரன் 11.10.2010
பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள சரோஜினி பூங்கா பராமரிப்பின்றி பாழ்பட்டுக்கிடக்கிறது. பாளையில் பராமரிப்பின்றி பாழாகும் பூங்காக்கள்நெல்லை
, அக். 11: பாளையில் பராமரிப்பு இல்லாமல் பாழாகும் பூங்காக்களை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண் டும். நெல்லை மாநகராட்சி மக்கள் பயனுள்ள வகையில் பொழுதை போக்க முன்பு பாளை பகுதியில் பல்வேறு பூங்காக்கள் மற்றும் நூலகங்கள் இடம் பெற்றிருந்தன. பாளை பஸ் நிலையம் அருகேயுள்ள சரோஜினி பூங்கா பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்தது. கடந்த 1936ம் ஆண்டு திவான்பகதூர் குமாரசாமி பிள்ளை இப்பூங்காவை திறந்து வைத் தார். பாளை நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பலரும் மாலை பொழுதை போக்க இங்கு வந்து செல்வது வழக்கம்.75
ஆண்டுகள் பழமைமிக்க சரோஜினி பூங்கா தற்போது முட்கள் அடர்ந்து புதர்க் காடாக காட்சியளிக்கிறது. செடி, கொடிகளும், மரங்களும் தாறுமாறாக வளர்ந்து நிற்பதால், பூங்கா அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சில ஆண்டுக ளுக்கு முன் இங்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டபோது, மாநகராட்சி அதிகாரிகள் இதன் வாசல் கதவை இழுத்து பூட்டிவிட்டனர். இதனால் வாசல்வரை முட்களின் ஆதிக்கம் காணப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக இப்பூங்கா பராமரிப்பில் மாநகராட்சி எவ்வித அக்கறையும் காட்டவில்லை
. இப்பூங்காவை திறந்து பார்வையாளர்களை அனுமதித்தால், குடிநீர் தொட்டிக்கு பாதிப்பு ஏற்படும் என மாநகராட்சி கருதுவதாக கூறப்படுகிறது. இப்பூங்கா களையிழந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் மாலை நேரத்தில் பொழுது போக்க, வஉசி மைதானத்திற்கு சென்று வருகின்றனர். பாளை பஸ் நிலையம் அருகிலுள்ள இப்பூங்காவில் முட்களை அகற்றி, செடி, மரங்களை சீராக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.இதேபோல் பாளை மிலிட்டரி கேன்டீன் அருகேயுள்ள மனகாவலம் பிள்ளை பூங்காவும் தற்போது பராமரிப்பு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது
. இரவு நேரங்களில் மது அருந்துவோருக்கு புகலிடமாக இப்பூங்கா திகழ்கிறது. இப்பூங்காவில் முன்பு செய்தித்தாள்களுடன் புத்தகங்கள் படிக்கவும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாநகராட்சி அதிகாரிகள் இப்பூங்காவையும் சீரமைத்து செப்பனிட்டால், விடுமுறை தினங்களில் மக்கள் தங்கள் பொழுதை இனிமையாக கழிக்க வழி பிறக்கும்.