தினமலர் 13.10.2010
தாந்தோணி நகராட்சி கமிஷனர் மீது அதிருப்தி தன்னிச்சை செயல்பாடு
கரூர்: கரூர் மாவட்டம், தாந்தோணி நகராட்சி கமிஷனர் தன்னிச்சையாக செயல்படுவதாக, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.தாந்தோணி நகராட்சி அவசர கூட்டம், தலைவர் ரேவதி தலைமையில் மன்ற வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், தாந்தோணிமலை கோவிலை சுற்றியுள்ள தேர் வீதி தளம் அபிவிருத்தி, தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, குமரன் சாலை, ராயனூர் பகுதி சாலை, காமராஜ் நகர் சாலை பாரதிதாசன் நகர் , ஜீவா நகர், திண்ணப் பா நகர், காந்திகிராமம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி சாலை உள்ளிட்ட 10 திட்டங்கள் 106.8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டது.25.16
கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு, கட்டளை பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், தாந்தோணி நகரில் ஏழு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் நீர் உந்து நிலையம், நீர் சேகரிப்பு கிணறு, நீரேற்று குழாய், பகிர்மான குழாய் பதித்தல் பணி நடக்கவுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை நகராட்சிக்கு பெற்று, திட்டப்பணிக்கு பயன்படுத்த கரூர் கலெக்டர் அனுமதி கோரப்பட்டது.நகராட்சியில் முதல் 13 வார்டுகளுக்கு ஒப்பந்த அடிப்டையில் சுகாதார பணிகளை தனியார் மே ற்கொண்ட காலக்கெடு முடிந்ததால், தினக்கூலி அடிப்படையில் செப்டம்பர் 6ம் தேதி முதல் நியமிக்கப்பட்ட பணியாளருக்கான ஊதியம் வழங்க கவுன்சிலர் அனுமதி கோரப்பட்டது. மேலு ம், கூடுதலாக 75 துப்புரவு பணியாளர் பணியிடங்களை அனுமதிக்க கோரி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கோரிக் கை விடுக்கப்பட்டது குறித்தம் பார்வைக்கு வைக்கப்பட்டது.இந்த இரு குறிப்புகளும் இடம்பெற்ற 6 மற்றும் 7ம் தீர்மானத்தை கவுன்சிலர்கள் பெ.ரவி, ராதாகிருஷ்ணன், பாலுசாமி, பாபுக்குமார், வசந்தாமணி, மாரியம்மாள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மன்றத்தில் அனைத்து தீர்மானமும் நிறைவேறியது.எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் கூறியதாவது
: தாந்தோணி நகராட்சியில் 1 முதல் 13ம் வார்டு வரை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்டையில் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், ஒப்பந்த காலம் ஆகஸ்ட் 31ம் தேதி முடிந்தது. தனியார் துப்புரவு பணிக்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது குறித்து இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது. ஆனால், எந்த அறிவிப்பும் இணையதளத்தில் இல்லை. இணைய தளத்தில் அறிவிப்பு வெளியான பிறகு, “டென்டர்‘ அழைக்குமாறு கமிஷனர் தெய்வசிகாமணியிடம் நேரில் கூறினோம்.ஆனால், அவர் தன்னிச்சையாக “டென்டர்‘ அழைத்து உறுதி செய்தார்.இதைக்கண்டித்து கவுன்சிலர் ஏகாம்பரம், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும், ஒப்பந்தப்புள்ளியிலும், கடந்த ஆண்டை விட 98 ஆயிரம் ரூபாய் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.தலைவர் ரேவதி கூறுகையில், “”ஒப்பந்தப்புள்ள விஷயத்தில் உயர்நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், சுகாதார அவசியத்தை கருதி, கரூர் மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி அடிப்டையில் தற்காலிக பணியாளர் நியமனம் செய்யப்பட்டு பணி நடக்கிறது. கூடுதலாக 75 பணியாளர் நியமனத்துக்கும் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுமதி கோரப்பட்டுள்ளது,” என்றார்.