தினமலர் 15.10.2010
மாநகராட்சி குடிநீர் கட்டணம் இன்றுக்குள் செலுத்தணும் தவறினால் இணைப்பு
“கட்‘திருச்சி
: திருச்சி மாநகராட்சிகமிஷனர் பால்சாமி வெளியிட்ட அறிக்கை:குடிநீர் நிலுவை மற்றும் நடப்பு கேட்பு விபரங்களை ஏற்கனவே மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்தியோ அல்லது கணினி வரிவசூல் மையத்தை நேரடியாக அணுகியோ தங்களது வரிவிதிப்பு எண்ணை தெரிவித்து, நிலுவை மற்றும் நடப்பு கேட்புத் தொகையை அறிந்துகொள்ளலாம்.எனவே, திருச்சி மாநகராட்சிப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டட உரிமையாளர், வணி வளாகங்களின் உரிமையாளர், தொழிற்சாலை கட்டட உரிமையாளர் தாங்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தை மாகநராட்சி மைய அலுவலகம், நான்கு கோட்ட அலுவலகம், சேவை மையம், நடமாடும் கணினி வரி வசூல் மையம் ஆகியவற்றில நிலுவையின்றி இன்றுக்குள் செலுத்தி உரிய ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.தவறும்பட்சத்தில், மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட பொறியர் பிரிவு மற்றும் வருவாய் பிரிவு அலுவலர் அடங்கிய சிறப்பு குழுவினர் மூலம் திருச்சி மாநகராட்சி சட்டப் பிரிவின் படி குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.