தினமணி 20.10.2010
வீரப்பன்சத்திரம் நகராட்சியில் நலத்திட்ட உதவிகள்
ஈரோடு
, அக். 19: ஈரோடு வீரப்பன்சத்திரம் நகராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சித் தலைவர் மல்லிகா நடராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் சட்டப்பேரவை உறுப்பினர் என்கேகேபி
.ராஜா பங்கேற்று, இருவருக்கு தலா ரூ 400 வீதம் ஊனமுற்றோர் உதவித்தொகையும், மூவருக்கு முதியோர் உதவிதொகையும், 29 பேருக்கு தலா ரூ 6 ஆயிரம் மகப்பேறு நிதியுதவியும் வழங்கினார்.நகராட்சி துணைத் தலைவர் செல்வராஜ்
, செயல் அலுவலர் தன்னாசி, வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.