மாலை மலர் 21.10.2010
குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு ரூ.1.57 கோடி போனஸ்: கருணாநிதி உத்தரவு

சென்னை, அக். 21-தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களில் மாதம் 9300-34800 ஊதியத்துடன் ரூ. 4,300 தர ஊதியம் பெறும் பதவிகளில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் சட்டத்தின்படி சம்பள உச்சவரம்பிற்கு விலக்களித்து, 2009-2010 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கிட முதல்– அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 4 ஆயிரத்து 493 பணியாளர்களுக்கு ரூ. 1 கோடியே 57 லட்சம் போனஸ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.