தினமணி 23.08.2009
குமரி பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு
கன்னியாகுமரி, ஆக. 22: கன்னியாகுமரி பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் எப்.கோல்டா தலைமை வகித்தார்.
கன்னியாகுமரி பேரூராட்சியில் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்க புதிதாக திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள், குடிநீர்த் தொட்டிகள் கட்டவும் பேரூராட்சி நிதியில் இருந்து ரூ. 1 கோடி வழங்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னமுட்டம், ஒற்றையால்விளை, பெரியார்நகர், சுவாமிநாதபுரம், ரட்ஷகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்க்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா, உறுப்பினர்கள் தம்பித்தங்கம், மெல்பின், சகாயராஜ், அமலதாஸ், சுடலைமணி, சுதந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.