தினகரன் 02.11.2010
உள்ளாட்சி தினவிழா நகராட்சியில் கோலாகலம்
பொள்ளாச்சி, நவ. 2: பொள் ளாச்சி நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நகராட்சித் தலைவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதிலும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் தேதியன்று உள்ளா ட்சி தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி கோவை மாவட் டம் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகாலிங்கபுரம் பகுதியில் இருந்து நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்,எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகளிர் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவிகளும் நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி வழங்கினார். நகரம் முழுவதிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள்தோறும் வழங்கும் திட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ துவக்கி வைத்தார். நகர பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள புதிய சாலை மேம்பாட்டு திட்டம், நாச்சிமுக்கு மகப்பேறு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கு, காந்தி வாரச்சந்தை அருகே கட்டி முடிக்கப்பட்ட ஆடுவதைக் கூடம் ஆகியவற்றை நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் திறந்து வைத்தார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமும் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் நகராட்சி பொறியாளர் மோகன், நகரமைப்பு அலுவலர் வரதராஜன், நகர் நல அலுவலர் குணசேகரன், கவுன்சிலர்கள் கவுதமன், கண்ணன், மணிகண்டன், ரங்கநாதன், ராதா, லிங்கபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.