தினமணி 02.11.2010
நகர்மன்ற அவசரக் கூட்டம்
கள்ளக்குறிச்சி, நவ. 1: கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் ராஜாம்மாள் நகரில் உள்ள புதிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நகராட்சிகளில் பணியிடைக் காலத்தில் இறந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம், புதிய அலுவலகத்தில் பெயர்ப் பலகை வைப்பது, கல்வெட்டு அமைப்பது.
நகராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு அனுமதியளித்த நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சொ.பாலசுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். அவசரக் கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவி அழகுவேல்பாபு தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜ.ஜோதிமணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் எல்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு அருகே இயங்கி வந்த நகராட்சி அலுவலக பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக ராஜாம்பாள் நகரில் உள்ள நகராட்சிக் கட்டடத்தில் திங்கள்கிழமை முதல் இயங்குகிறது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோபால், முருகன், பொறியாளர் வே.பாலமுருகன், அலுவலக தலைமை எழுத்தர் ஆறுமுகம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர்.