தினமலர் 04.11.2010
தென்காசி நகராட்சி பகுதியில் வீடு கட்ட கடன் விண்ணப்பம் பெறல்
தென்காசி;தென்காசி நகராட்சி பகுதியில் ஏழை மக்கள் வீடு கட்ட கடன் விண்ணப்பம் பெறப்பட்டது.தென்காசி நகராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் சொந்தமாக வீடு கட்ட பாங்க் மூலம் கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் தென்காசியில் நடந்தது. நகராட்சி கமிஷனர் செழியன் தலைமை வகித்து பயனாளிகளிடம் விண்ணப்பங்களை பெற்றார். நகராட்சி மேலாளர் சித்தார்த்தன் வரவேற்றார்.தென்காசி ஆர்.ஐ.ஐயப்பன், வி.ஏ.ஓ.க்கள் ராமனாதன், தேவதாஸ், சார்–பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் ஆகியோர் பயனாளிகளிடம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், பட்டா நகல்களை சரிபார்த்தனர். வருமான சான்று, வில்லங்க சான்று வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.முகாமில் 540 பயனாளிகள் வீடு கட்ட கடன் கேட்டு விண்ணப்பம் வழங்கினர்.