தினமலர் 18.11.2010
கனமழை: செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வுசெம்பரம்பாக்கம்
: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 3,645 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 24 அடி நீர்மட்டமும் காண்டது. “ஜல்‘ புயலின் போது பெய்த மழையால் ஏரியின் நீர் மட்டம் சற்று உயர்ந்திருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 15.89 அடியாகவும், கொள்ளளவு ஆயிரத்து 698 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. ஏரிக்கு வினாடிக்கு 290 கனஅடி நீர்வரத்து உள்ளது.