தினமணி 25.11.2010
இன்று குடிநீர் குறைதீர்ப்பு முகாம்
பெங்களூர், நவ. 24: பெங்களூர் நகர வடக்குப் பகுதியில் குடிநீர் குறைத்தீரப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. நகர வடக்கு 4-ம் துணைமண்டலத்தில் அடங்கிய வித்யாரண்யபுரம், சஹகார நகர், யலஹங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான குடிநீர் குறைதீர்ப்பு முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற பிரச்னைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.