தினகரன் 30.11.2010
வரிகளை உடனடியாக செலுத்த நகராட்சி வேண்டுகோள்
நாமக்கல், நவ.30: நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்கட்டணம், கடைவாடகை, பாதாளசாக்கடை வைப்புத்தொகை மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் அல்லது நகராட்சி வரிவசூல் மையங்களில் உடனடியாக செலுத்தவேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை போன்ற சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் வசதிக்காக நகராட்சி வரிவசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுகிழமைகளில் செயல்படும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.