தினகரன் 03.12.2010
‘சென்னை பள்ளி’ என அச்சிட முடிவு : மாநகராட்சி மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்சென்னை, டிச.3:
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் சென்னை நகரில் 67 உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகள் முன்பு சென்னை மாநகராட்சி பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. தற்போது இந்த பள்ளிகளுக்கு ‘சென்னை பள்ளிகள்’ என்று பெயரிடப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் இந்த பள்ளிகள் மூலம் 12000 மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலை வகுப்பு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை 6000 பேரும், பிளஸ் 2 தேர்வை 9000 பேரும் எழுதுகின்றனர். இந்த ஆண்டு முதல் மதிப்பெண் பட்டியல்களில் ‘சென்னைப் பள்ளிகள்’ என்று அச்சிட்டு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாநகராட்சி அதிகாரிகள், அரசு தேர்வுகள் இயக்குனரிடம் நேற்று கொடுத்தனர். மதிப்பெண் பட்டியல்களில் சென்னை பள்ளிகள் என்று அச்சிட்டு வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.