தினகரன் 06.12.2010
கனமழையால் கடும் பாதிப்பு சேத மதிப்பீடு தயாரிக்கிறது மாநகராட்சி நிர்வாகம்
திருப்பூர்
, டிச.6: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறது திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம். கனமழையால் சேதமடைந்த சாலை, சாக்கடைகளை சீரமைக்க சிறப்பு நிதி கோரவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாநகர பகுதியில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 21, 22வது வார்டு உள்ளிட்ட பல வார்டுகளில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் மாநகரில் பெய்த இந்த கனமழை காரணமாக பல சாலைகள் சேதமடைந்தன.மாநகரில் வெள்ள சேதம் குறி த்து ஆய்வு மேற் கொள்ள அரசு உத்தரவிட் டது. அதன் படி தற்போது தனிக்குழு அமைக்கப்பட்டு, மழை சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அரசிடம் சமர்பிக்கப்பட்டு சேதமடைந்த சாலை கள், சாக் கடை கால்வாய் களை சீரமைக்க சிறப்பு நிதி கோர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர் பாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ‘’திருப்பூரில் கனமழையால் சேதமடைந்த விவரங்கள் சேகரி க்கப்பட்டு வருகிறது. அதன் படி, மாநகரில் சாலை, சாக்கடைகள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இது தொட ர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், இவற்றை சீரமைக்க அரசிடம் நிதி கோரப்படும். இது தொடர் பான விவரங்கள் விரைவில் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்,” என்றார்.