தினகரன் 10.12.2010
அரசு அனுமதி கிடைத்தவுடன் மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்
கோவை
, டிச. 10: கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.இட்லி
, தோசை மட்டுமின்றி ரவா உப்புமா, சேமியா, கேசரி என 18 வகை உணவுகளை தினமும் ஒவ்வொன்றாக வழங்க முடிவு எடுத்து, மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. திட்டம் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ1 கோடி செலவாகும்.தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட் டது
. ஆனால், திட்டம் தொடங்குவ தில் தாமதமாகி வருகிறது. இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா கூறுகையில், ‘’அரசு அனுமதிக்கு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும்” என்றார்.