தினகரன் 14.12.2010
சாக்கடை கழிவுநீர் செல்ல பிரதான தொட்டி 1ம் தேதிக்குள் அமைக்க கெடு வர்த்தக நிறுவனங்களுக்கு மாநகராட்சி உத்தரவு
திருப்பூர், டிச.14: பாதாள சாக் கடையில் ஆள் இறங்க அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், பாத £ள சாக்கடையில் அடைப் பை தவிர்க்க, திடப்பொருட்கள் செல்வதை தடுக்கும் வகையில் பிரதான தொட்டி அமைக்க வேண் டும் என வர்த்தக நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பாதாள சாக்கடை அமைப்புகளில் உள்ள ஆள் இறங்கும் குழிகளிலும், செப்டிங் டேங்க் உள்ளேயும் பணியாளர்கள் இறங்கி பணி செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவு சரிவர பின்பற்றப்படாத நிலை இருந்து வந் தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி தமிழக அரசு நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் இது தொடர்பாக அரசா ணை ஒன்று வெளியிடப்பட்டது. பாதாள சாக்கடை அமைப்புகளில் உள்ள ஆள் இறங்கும் குழிகள் மற்றும் செப்டிக் டேங்க் உள்ளே பணியாளர்கள் இறங்கி பணி செய்ய தடையாணை பிறப்பிக்கப்பட்டது. எந்த சூழ்நிலையிலும் ஆட்கள் பாதாள சாக்கடையில் உள்ள ஆள் இறங்கும் குழிகள் மற்றும் செப்டிக் டேங்க்களில் இறங்க கூடாது. அதற்குரிய இயந்திரங்களைக் கொண்டு மட்டுமே அடைப்பு நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் பாதாள சாக்கடைகளில் திடப்பொருள் அடைப்பை இயந்திரங்கள் மூலம் அகற்றுவதில் பல்வேறு சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து திடப்பொருள் பாதாள சாக்கடையினுள் செல்லாமல் தடுக்க வர்த்தக நிறுவனங்களில் பாதாள சாக்கடை பராமரிப்பு பிரதான தொட்டி அமைக்க வேண்டும் என அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் வகையில், நேற்று மாலை திருப்பூர் டவுன்ஹாலில் வர்த்த நிறுவனத்தினருடனான விழிப்புணர்வு கூட்டத்தை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நேற்று நடத்தியது.
மாநகராட்சி ஆணை யாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் செல்வராஜ் பாதாள சாக்கடை பராமரிப்பு தொட்டி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘’பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆட்கள் இறங்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம். பெரும்பாலும் ஹோட்டல்,
வர்த்தக அமைப்பினரிடம் ஆர்வமில்லை
பாதாள சாக்கடையில் திடக்கழிவு செல்லாத வகையில் தடுப்பது தொடர்பான இந்த விழிப்புணர்வு முகாமில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிக குறைவானவர்களே பங்கு கொண்டனர். ஹோட்டல், லாட்ஜ், திருமணம் என ஆயிரத்துக்கும் அதிகமான வர்த்தக அமைப்புகள் உள்ள போது, 100க்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கு கொண்டனர். மாநகராட்சி விழிப்புணர்வு முகாமில் போதிய ஆர்வமில்லாத நிலை இருந்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘’வர்த்தக அமைப்பினர் எதிர்பார்த்த அளவு வரவில்லை. இருப்பினும் ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்கள் தெரியப்படுத்துவார்கள். அதனை கொண்டு அவர்கள் தொட்டியை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
மாநகராட்சி ஆணை யாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் செல்வராஜ் பாதாள சாக்கடை பராமரிப்பு தொட்டி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘’பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆட்கள் இறங்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம். பெரும்பாலும் ஹோட்டல்,
லாட்ஜ், கல்யாண மண்டபங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தே திடக்கழிவுகள் வெளியேற்றப்படு கிறது. எனவே அதனை தவிர்க்கும் வகையில், திடப்பொருட்கள் பாதாள சாக்கடைக்குள் செல்லாமல் தவிர்க்க பிரதான தொட்டி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.,” என்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தக நிறுவனத்தினருக்கு, கழிவுகளை வெளியேற்றும் போது கவனிக்க வேண்டியவை தொடர் பான பிரசுரங்கள் மற்றும் கட்டப்பட வேண்டிய பிரதான தொட்டியின் அமைப்பு குறித்த வரைபடம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண் டனர்.இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘’வரும் 1ம் தேதிக்குள் இந்த பிரதான தொட்டி அமைக்கப்பட வேண்டும். இதில் எந்த மாற்றமும் இருக்காது. அதற்கு பின்னர் இந்த தொட்டி அமைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வர்த்தக அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஹோட்டல், லாட்ஜ், திருமண மண்டபங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மாநகராட்சிஅதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஆய்வின் போது பிரதான தொட்டி அமைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.