அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி ஆய்வு : 18 மாதங்களில் முடிக்க நடவடிக்கை
அரியலூர், டிச. 16: அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 27.5 கோடியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணியை கலெக் டர் பொன்னுசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது கே.கே.நகரில் பா தாள சாக்கடை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் அரசு நிர்ணயித்த அளவில் உள்ளதா, பணி முடிவுற்ற உடன் சாலையில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி பொதுமக்கள் போக்குவரத்திற்கு சிரமமின்றி சென்றுவர வழிவகை செய்துதர வேண்டுமென ஒப்பந்தகாரர்களிடம் கூறினார்.
பின்னர் ராஜாஜி நகரில் பாதாள சாக்கடை அமைக் கும் பணிகளை ஆய்வு செய்து சிமென்ட் கலவை சரியான முறையில் உள் ளதா என்பதை ஆய்வு செய்தார். பணிகள் முடித்த பின்னர் பொதுமக்கள் சிரமமின்றி போய்வர ஆட் களை கொண்டு சாலையில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி தர வேண்டும். பூச்சுகள் மற்றும் இணைப்புகள் அனைத்தும் உறுதிப்படுத்துவதற்கு 3,4 நாட்கள் இடைவெளிவிட்டு பின்னர் குழிகளை மூடவேண்டும் என்றார். இந்த பணிகளை தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அரியலூர் நகராட்சியில்
ரூ. 27.5 கோடியில் 37.9 கிலோமீட்டர் தூரம் வரை பாதாள சாக்கடை அமை க்கும் பணி கடந்த நவம்பர் மாதம் துவங்கியது. பணியில் 1,343 பாதாள சாக்கடை துவாரங்கள் (மேன் ஹோல்ஸ்) அமைக்கப்படுகின்றன. பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 170 மீட்டர் தூரம் பணிகள் நடந்துள்ளது.
அரியலூர் நகராட்சி பகுதிகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 4.48 மில்லியன் லிட்டர் கழிவுநீர் தினந்தோறும் வெளியேற்றும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பணிகள் நடந்து வருகிறது. இப்பணி 18 மாதங்களில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நகராட்சி தலைவர் விஜயலட்சுமி செல்வராஜ், துணைத்தலைவர் சுப்பிரமணியன், நகராட்சி உறுப்பினர்கள் தமிழரசன், ராமமூர்த்தி, சந்திரசேகர், ராமு, குணா, மணிவண்ணன், நகராட்சி ஆணையர் மோகன், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) ராமகிருஷ்ணன், வட்டார வளர் ச்சி அலுவலர்கள் ஜெயமரிநாதன், வட்டாட்சியர் கோவிந்தராஜீலு கலந்து கொண்டனர்.