தினமலர் 27.07.2012
குப்பை குழியில் மனித உறுப்பு; மருத்துவமனை பற்றி தீவிர விசாரணை
குன்னூர் : “குன்னூர் நகராட்சி குப்பை குழியில் மனித உறுப்பு வீசிய மருத்துவமனை கண்டறிப்பட்டால், அந்த மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்குழியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித உறுப்புகள் உட்பட மருத்துவ கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குன்னூர் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நகராட்சி கமிஷனர் சண்முகம் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை ஆய்வாளர் மால்முருகன் தலைமையில், சுகாதரத்துறை ஊழியர்கள் குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
நகராட்சிகளின் மண்டல இயக்குனர் உத்தரவின் பேரில், தீவிர ஆய்வு பணி நடக்கிறது.
“குப்பை குழியில் மனித உறுப்பு வீசிய மருத்துவமனை குறித்து கண்டறிப்பட்டால், அந்த மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என சுகாதார ஆய்வாளர் மால் முருகன் தெரிவித்தார்.
“குப்பை குழியில் மனித உறுப்பு வீசிய மருத்துவமனை குறித்து கண்டறிப்பட்டால், அந்த மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என சுகாதார ஆய்வாளர் மால் முருகன் தெரிவித்தார்.