தினமணி 05.09.2012
உசிலம்பட்டி நகராட்சியில் எலி ஒழிப்பு பணி
உசிலம்பட்டி,செப். 4: உசிலம்பட்டி நகராட்சி சார்பில் மருத்துவமணையில் எலி ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிசுவை பெருச்சாளி கடித்த விவகாரத்தையடுத்து, அரசு மருத்துவமனை இணை இயக்குநர் (பொ) ரவி, மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் குபேந்திரன் ஆகியோரது உத்தரவின்பேரில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் நகராட்சி ஆணையாளர்
பாப்பம்மாள், அரசு நிலைய மருத்துவர் சேர்மன்பாண்டி,சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், ஜெயசந்திரன்,கட்டட ஆய்வாளர் குமரேசன்,மேஸ்திரி சங்கர் மற்றும் பணியாளர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் எலிகளைப் பிடிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர். அரசு மருத்துவர் சேர்மன்பாண்டி தெரிவிக்கையில், நோயாளிகள் மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.