தினகரன் 06.09.2012
சாலை துப்புரவு பணி
தூத்துக்குடி, : தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து பாரத் பவர் பிளாண்ட் இணைந்து ஒருநாள் சாலை விழிப்புணர்வு மற்றும் சாலை சுத்தம் செய்யும் முகாமை நடத்தியது. முகாமை மேயர் சசிகலாபுஷ்பா தொடங்கிவைத்தார். இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பாரா மெடிக்கல் பள்ளி, எஸ்.ஏ.வி.பள்ளி, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மாநகராட்சி கமிஷனர் மதுமதி, இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் இயக்குநர் கீதா, மாவட்ட தலைமை போக்குவரத்து காப்பாளர் ஜட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.