அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்திற்குள்பட்ட கோவிந்தநாட்டுசேரி ஊராட்சியில் அனுமதியின்றி 5 வீடுகளில் உபயோகித்து வந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் அண்மையில் துண்டித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உத்தரவின் பேரில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுரளி,விஜயலெட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சிக்குள்பட்ட பட்டுகுடி, கூடலூர்,புத்தூர், குடிகாடு, நாயக்கர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலுள்ள வீட்டு குடிநீர் இணைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியன்றி செயல்பட்டு வந்த 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ú
மலும் 102 வீடுகளின் குடிநீர் இணைப்புகளுக்கான நிலுவை தொகையினை இணைப்பிற்குரியவர்கள் தாங்களாகவே முன்வந்து செலுத்தினர்.
ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெனோவாபரமசிவம், துணைத் தலைவர் கணேசன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.