தின மணி 20.02.2013
டி.ஆர்.ஓ. காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இப்பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மேற்கண்ட முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ரேஸ்கோர்ஸ் காலனி குடியிருப்புகளில், பொதுக்குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
டி.ஆர்.ஓ. காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி குடியிருப்புகளில் வீட்டுவசதி வாரியத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில் போதிய தண்ணீர் இல்லை.
இதனால், குடியிருப்புகளுக்கு புழக்கத்திற்குத் தேவையான தண்ணீர் வீட்டுவசதி வாரியத்தில் விநியோகம் செய்ய இயலவில்லை.
பிப்ரவரி 17 ஆம் தேதி, ஆட்சியர் முகாமிற்கு பொதுமக்கள் சென்றதற்கு, வீட்டுவசதி வாரியத்தில் போர்வெல்லில் தண்ணீர் விநியோகம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.
ஆனால், குடியிருப்புகளுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தேவைப்படும் காலங்களில், லாரி மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.