தின மணி 23.02.2013
பிறப்பு, இறப்பு சான்றிதழில் நேரம் குறிப்பிடப்படும்
மாநகராட்சி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கும்போது அதில் பிறந்த, இறந்த நேரம் குறிப்பது என மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேயர் பரிந்துரைப்படி, பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் மென்பொருளில் நேரம் குறிப்பிடும் வசதியை கணினி மையம் உருவாக்கியுள்ளது. எனவே பிறப்பு, இறப்பு நேரத்துடன் கூடிய சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கும் செய்யும் நடவடிக்கையை கணினி மையம் மேற்கொள்ள அனுமதி கோரி தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. அதிக உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.