தினமலர் 04.03.2013
குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி “கெடு’
சென்னை:”குடிநீர் வரி, கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை, இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்’ என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.
சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:
நடப்பு நிதியாண்டுக்கான (2012-13), இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களையும், மேல் வரி இல்லாமல் இம்மாத இறுதிக்குள், செலுத்த வேண்டும். வரியையும், கட்டணத்தையும் தலைமை அலுவலகம், பணிமனை வசூல் மையங்களிலும் வரியை செலுத்தலாம். இந்த வசூல் மையங்கள், மார்ச் 24, 31ம் தேதிகளான, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.