மலிவு விலை உணவகங்கள்: மேலும் 40 வார்டுகளில் நாளை திறப்பு
சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 40 மலிவு விலை உணவகங்கள் புதன்கிழமை (மார்ச் 6) திறக்கப்படுகின்றன.
சென்னையில் 200 வார்டிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல்கட்டமாக 15 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. பின்னர் முதல்வர் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி 24 வார்டுகளில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மேலும் 40 வார்டுகளில் மலிவு விலை உணவகங்கள் புதன்கிழமை திறக்கப்படவுள்ளன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில், தாழக்குப்பம் கத்திவாக்கம் நெடுஞ்சாலை (வார்டு 1), திருவொற்றியூர் வடக்கு மாதா தெரு (வார்டு 10), மணலி பாடசாலை தெரு (வார்டு 21), மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெரு (வார்டு 31), வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 3-வது பிரதான சாலை (வார்டு 37), வியாசர்பாடி மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் (வார்டு 45), கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 4-வது தெரு (வார்டு 47), சிங்கார தோட்டம் 4-வது தெரு (வார்டு 49), பழைய வண்ணாரப்பேட்டை (வார்டு 51), கடற்கரை சாலை 3-வது சந்து (வார்டு 60), எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை (வார்டு 61), சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூடம் சாலை (வார்டு 62), ராயப்பேட்டை பாரதி சாலை (வார்டு 63), கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெரு (வார்டு 76), புளியந்தோப்பு கே.பி.பூங்கா (வார்டு 77), சூளை குரவன் குளம் (வார்டு 78), அம்பத்தூர் வெங்கடாபுரம் தெற்கு பூங்கா தெரு (வார்டு 81), பாடி சி.டி.எச். சாலை (வார்டு 87), அண்ணா நகர் 2-வது பிரதான சாலை கே பிளாக் (வார்டு 101), கீழ்ப்பாக்கம் சிமெட்ரி சாலை (வார்டு 102), எம்.எம்.டி.ஏ. காலனி (வார்டு 108), கோபாலபுரம் சீனிவாச பெருமாள் சன்னதி 2-வது தெரு (வார்டு 118), ராயப்பேட்டை பேகம் சாகிப் 5-வது தெரு (வார்டு 119), சாரதாபுரம் (வார்டு 124).
மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு (வார்டு 135), கே.கே. நகர் 10-வது செக்டர் (வார்டு 137), மேற்கு ஜாபர்கான் பேட்டை அய்யாவு தெரு (வார்டு 138), ஆர்.ஆர். காலனி 2-வது தெரு (வார்டு 139), நொளம்பூர் 4-வது பிரதான சாலை (வார்டு 143), போரூர் ஆஞ்சநேயர் கோயில் தெரு (வார்டு 151), ராமாபுரம் பஜனை கோயில் தெரு (வார்டு 155), முகலிவாக்கம் (வார்டு 156), ஆலந்தூர் புதுதெரு (வார்டு 160), மேற்கு வேளச்சேரி ஐ.சி.டி.எஸ். கட்டடம் (வார்டு 177), வேளச்சேரி பிரதான சாலை (வார்டு 178), புழுதிவாக்கம் பேருந்து நிலையம் (வார்டு 169), மடிப்பாக்கம் பஸ் டெர்மினஸ் (வார்டு 188), ஜல்லடம்பேட்டை ரைஸ் மில் சாலை (வார்டு 191), நீலாங்கரை (வார்டு 192), ஈஞ்சம்பாக்கம் (வார்டு 196) ஆகிய இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.