சொத்து வரி செலுத்தாத 10 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி கமிஷனர் அதிரடி
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்தாத 5 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டித்து மாநகராட்சி கமிஷனர் லதா அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி முதலிய அனைத்து நிலுவை மற்றும் நடப்பு கேப்பு தொகைகளையும் பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும். 2012-13 ம் இரண்டாம் அரையாண்டு 31-3-13ல் முடிவடைகிறது. வரும் 17,24, 31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம் போல் செயல்படும். வரி வசூல் பணியினை தீவிரப்படுத்தும் பொருட்டு நிலுவை வைத்துள்ள கட்டட உரிமைதாரர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வடக்கு மண்டலம் பகுதியில் மட்டும் இதுவரை 10 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதை போன்று அனைத்து மண்டலங்களிலும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாக உரிமைதாரர்கள் உடனடியாக நிலுவை தொகைகளை செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறும் மாநகராட்சி ஆணையர் லதா தெரிவித்துள்ளார்.