தினமலர் 22.03.2013
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 50 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 55 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக
அரசு, அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு
அச்சுறுத்தலாக விளங்கும் வீட்டு மற்றும் தெரு நாய்களுக்கு கருத்தடை
சிகிச்சை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,
பொதட்டூர்பேட்டைபேரூராட்சியில் உள்ள, தெருக்களில் சுற்றித் திரிந்த, வீட்டு
மற்றும் தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
புளூகிராஸ்
நிறுவனம் சார்பில், செய்யப்பட்ட இந்த சிகிச்சையில், 55 நாய்களுக்கு
சிகிச்சை செய்யப்பட்டது. இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்
ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், தலைவர் தண்டபாணி ஆகியோர்
உடன் இருந்தனர்.