கமுதியில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவமனை நிறுவ பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கமுதி பேரூராட்சி கூட்டம், தலைவர் எஸ்.கே.சி. ரமேஷ் பாபு தலைமையில் துணைத் தலைவர் குருசாமி, செயல் அலுவலர் ஏ.தனபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 13 கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை எழுத்தர் அ. செல்வராஜ், 8 தீர்மானங்களை வாசித்தார். அவை:
நிறைவேற்றப்பட்டன. கமுதி, அபிராமம், சாயல்குடி ஆகிய பேரூராட்சிகளில் நாய்களை அடித்துக் கொல்வதற்குப் பதிலாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அரசு பரிந்துரையை ஏற்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இந்த 3 பேரூராட்சிகளுக்கும் சேர்த்து, கமுதி வாரச் சந்தை வளாகத்தில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவமனை நிறுவ கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ரூ.3 லட்சம் செலவில் கட்டடம் கட்டும் பணியை துரிதமாகத் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.