தினமலர் 23.03.2013
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா
வேதாரண்யம்: வேதாரண்யத்தில், பொன் விழா ஆண்டு நகர்ப்புற திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில், நகராட்சி தலைவர் மலர்க்கொடி தலைமை வகித்தார். கமிஷனர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். முகாமில், எம்.எல்.ஏ., காமராஜ் பங்கேற்று, இலவச வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நேர்காணல் முகாமை துவக்கி வைத்தார். முன்னணி கணினி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, நேர்காணல் நடத்தி, தேர்வு செய்தனர்.மகளிர் சுயஉதவிகுழுவினர் பங்கேற்றனர்.